Wednesday 27 December 2017

3. சோஷலிசமும் கம்யூனிசமும் - மா சே துங்

“சோஷலிச அமைப்பு இறுதியில் முதலாளித்துவ அமைப்பை மாற்றியமைத்து ஈடுசெய்யும். இது மனித சித்தத்துக்கு அப்பாற்பட்ட ஒரு புறநிலைவிதி. (Objective law) பிற்போக்குவாதிகள் வரலாற்றுச் சக்கரத்தைத் தடுத்து நிறுத்த எவ்வளவுதான் முயன்றாலும், இன்றோ நாளையோ புரட்சி தோன்றுவது நிச்சயம், அது வாகை சூடுவதும் தவிர்க்க முடியாதது.”
(மகத்தான அக்டோபர் சோஷலிசப் புரட்சியின் 40வது ஆண்டு நிறைவு விழாவின் போது சோவியத் யூனியன் உயர்தர சோவியத்
கூட்டத்தில் ஆற்றிய உரை – 6 நவம்பர் 1957)

“முழுமையாக நோக்கினால், சீனக்கம்யூனிஸ்டுக் கட்சி தலைமை தாங்கும் சீனாவின் புரட்சி இயக்கம் இரண்டு கட்டங்களை, அதாவது ஜனநாயக, சோஷலிசப் புரட்சிகளை உள்ளடக்கியது. இவை இரண்டும் சாராமசத்தில் வேறுபட்ட இரண்டு புரட்சிகர போக்குகள். முன்னது முழுமையாக்கப்பட்ட பின்னர் தான் பின்னது நிறைவேற்றப்பட முடியும். ஜனநாயகப் புரட்சி என்பது சோஷலிசப் புரட்சிக்குத் தேவையான ஒரு தயாரிப்பு. சோஷலிசப் புரட்சி ஜனநாயகப் புரட்சியின் தவிர்க்க முடியாத ஒரு நீட்டிப்பு. கம்யூனிஸ்டுகள் அனைவரும் பாடுபடும் இறுதி லட்சியம் ஒரு சோஷலிச, கம்யூனிச சமூதாயத்தை நிறுவுவதேயாகும்.”
(சீனப் புரட்சியும் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியும் – டிசம்பர் 1939)

“மத்தியதர விவசாயிகளுடன் ஐக்கியப்படுவது அவசியம். அப்படிச் செய்யாவிட்டால் அதுதவறு. ஆனால் மத்தியதர விவசாயிகளை ஐக்கியப்படுத்தி, நாட்டுப்புறம் முழுவதிலும் சோஷலிச மாற்றத்தை நிறைவேற்ற வேண்டுனால், நாட்டுப்புறத்தில் தொழிலாளர் வர்க்கமும் கம்யூனிஸ்ட் கட்சியும் யாரைச் சார்ந்திருக்க வேண்டும்? வறிய விவசாயிகளையன்றி வேறு யாரையும் அல்ல என்பது நிச்சயம். முன்பு நிலப்பிரபுக்களுக்கு எதிராகப் போராடிய போதும், நிலச்சீர்திருத்தம் நடைபெற்ற காலத்திலும் அப்படியே செய்யப்பட்டது. இன்று விவசாயத்தில் சோஷலிச மாற்றத்தை நிறைவேற்ற, பணக்கார விவசாயிகளுக்கும், இதர முதலாளித்துவ அம்சங்களுக்கும் எதிராகப் போராட்டம் நடத்தும்போதும் அப்படியே செய்ய வேண்டும்.

இந்த இரண்டு புரட்சிக் காலகட்டங்களிலும் மத்தியதர விவசாயிகள் ஆரம்பத்தில் ஊசலாடினார்கள். நிகழ்ச்சிகளின் பொது வளர்ச்சிப் போக்கையும், புரட்சியின் வெற்றிகிட்டி வருவதையும் தாம் தெளிவாகக் காணும் போது தான், மத்திரதர விவசாயிகள் புரட்சியின் பக்கம் சார்ந்து கொள்வர். புரட்சி என்பது நாளுக்கு நாள் பரந்து விரிந்து, இறுதியில் வெற்றி பெற வேண்டுமானால், வறிய விவசாயிகள், மத்தியதர விவசாயிகள் மத்தியில் வேலை செய்து அவர்களைத் தம் பக்கம் வென்றெடுகக வேண்டும்”
(பூஆன் மாவட்டத்தில் “மத்தியதர விவசாயிகள் கூட்டுறவு”ம் “வறிய விவசாயிகள் கூட்டுறவு”ம் தந்த பாடங்கள்- என்ற கட்டுரையின் அறிமுகக் குறிப்பு - 1955)

“மக்கள் ஜனநாயக சர்வாதிகாரத்திற்குத் தொழிலாளர் வர்க்கத்தின் தலைமை இன்றியமையாதது. ஏனென்றால் தொழிலாளர் வர்க்கம் தான் மிகவும் தொலைநோக்கு கொண்டது. மிகுதியும்  சுயநலம் அற்றது, மிக முற்றான புரட்சி உணர்வுடையது, தொழிலாளர் வர்க்கத்தின் தலைமை இல்லாவிட்டால் புரட்சி என்பது தோல்வியடையும், அதன் தலைமை இருந்தால் புரட்சி வாகை சூடும் என்பதைப் புரட்சி, வரலாறு முழுவதும் நிரூபிக்கின்றது.”
(மக்கள் ஜனநாயக சர்வாதிகாரம் பற்றி – 30 ஜீன் 1949)

“மகத்தான நிர்மாண வேலையில் மிகக் கடினமான கடமைகள் நம்முன் இருக்கின்றன. நமது கட்சியில் ஒரு கோடிக்கு மேலான உறுப்பினர்கள் இருந்த போதிலும், நாட்டின் முழு மக்கள் தொகையில் அவர்கள் மிகச் சிறுபான்மையினரே ஆவார். நமது பல்வேறு அரசாங்க நிறுவனங்களிலும், பொதுத்துறை நிறுவனங்களிலும் பெருமளவு வேலைகள் கட்சி உறுப்பினர்கள அல்லாதவர்களால் செய்யப்பட வேண்டியிருக்கின்றன.

நாம் பொதுமக்களைச் சார்ந்து நிற்பதிலும், கட்சி உறுப்பினர்கள் அல்லாதவர்களுடன் ஒத்துழைப்பதிலும் தேர்ச்சி பெற்றிருக்காவிட்டால், இந்த வேலைகளை நன்றாக செய்து சாத்தயமல்ல. கட்சி முழுவதின் ஐக்கியத்தை தொடர்ந்து பலப்படுத்தும் அதே வேளையில் நமது தேசிய இனங்கள் ஜனநாயக வர்க்கங்கள், ஜனநாயக கட்சிகள் மக்கள் நிறுவனங்கள் எல்லாவற்றின் ஐக்கியத்தைத் தொடர்ந்து பலப்படுத்தி, நமது மக்கள் ஜனநாயக ஐக்கிய முன்னணியையும் உறுதிப்படுத்தி விரிவாக்க வேண்டும். நமது வேலையின் எந்தத் தொடரிலும், கட்சிக்கும் மக்களுக்கும் இடையிலும் ஐக்கியத்தை ஊறுபடுத்தும் ஆரோக்கிய மற்ற எல்லா வெளிப்பாடுகளையும் நாம் உணர்வு பூர்வமாக, இலலாமல் செய்ய வேண்டும்.”

(சீனக் கம்யூனிஸ்ட் கட்சி 8வது தேசிய மாநாட்டின் ஆரம்ப உரை – 15 செப்டம்பர் 1956)

No comments:

Post a Comment