Thursday 28 December 2017

4. மக்கள் மத்தியில் உள்ள முரண்பாடுகளைச் சரியாகக் கையாள்வது பற்றி – மா சே துங்

“தன்மையில் வேறுபட்ட முரண்பாடுகள் தன்மையில் வேறுபட்ட முறைகளால் தான் தீர்க்கப்பட முடியும். எடுத்துக்காட்டாக, பாட்டாளி வர்க்கத்துக்கும் முதலாளி வர்க்கத்துக்கும் இடையிலுள்ள முரண்பாடு சோஷலிச புரட்சி முறையால் தீர்க்கப்பட வேண்டும். பரந்து பட்ட மக்களுக்கும் நிலப்பிரபுத்துவ அமைப்புக்கும் இடையிலுள்ள முரண்பாடு ஜனநாயகப் புரட்சி முறையால் தீர்க்கப்பட வேண்டும். காலனிகளுக்கும் ஏகாதியத்தியத்திற்கும் இடையிலுள்ள முரண்பாடு தேசியப் புரட்சி யுத்த முறையால் தீர்க்கப்பட வேண்டும். சோஷலிச சமூகத்தில் தொழிலாளர் வர்க்கத்திற்கும் விவசாயி வர்க்கத்திற்கும் இடையிலுள்ள முரண்பாடு விவசாயத்தைக் கூட்டுறவு மயமாக்கி, எந்திர மயமாக்கும் முறையால தீர்க்கப்பட வேண்டும். கம்யூனிஸ்ட் கட்சிக்குள் நிலவும் முரண்பாடு விமர்சனம், சுய விமர்சனம் என்ற முறையால் தீர்க்கப்பட வேண்டும். சமூகத்திற்கும் இயற்கைக்கும் இடையிலுள்ள முரண்பாடு உற்பத்தி சக்திகளை பெருக்கும் முறையால் தீர்க்கப்பட வேண்டும்… வேறுபட்ட முரண்பாடுகளைத் தீர்க்க வேறுபட்ட முறைகளை பயன்படுத்தும் கோட்பாடு மார்க்சிய-லெனினியவாதிகள் கண்டிப்பாகக் கடைப்பிடிக்க வேண்டிய ஒரு கோட்பாடு”
(முரண்பாடு பற்றி – ஆகஸ்ட் 1937)

“சித்தாந்த இயல்பு தழுவிய பிரச்சினைகளை, அல்லது மக்கள் மத்தியில் தகராறுக்கு உரிய பிரச்சினைகளைத் தீர்க்கும் ஒரே ஒரு வழி ஜனநாயக முறை, கலந்துரையாடல் முறை, விமர்சன முறை, இணங்கச் செய்வது, பயிற்றுவிப்பது ஆகியவற்றை பயன்படுததுவதன்றி, பலாத்காரத்தையோ அல்லது அடக்கு முறையையோ பயன்படுத்துவதல்ல”
(மக்கள் மத்தியில் உள்ள முரண்பாடுகளைச் சரியாகக்
கையாள்வது பற்றி – 27 பிரவரி 1957)

“முதலாளி வர்க்கமும் குட்டி முதலாளி வர்க்கமும் தத்தம் சித்தாந்தங்களை வெளியிடுவது தவிர்க்க முடியாதது. அரசியல், சித்தாந்தப் பிரச்சினைகளில் சாத்தியமான எல்லா வழிகளிலும் அவர்கள் தமது கருத்துககளைப் பிடிவாதமாக வெளியிடுவது நிச்சயம். அவர்கள் தமது கருத்துக்கள் வெளியிடாமலும் பிரதிபலிக்காமலும் இருப்பது சாத்தியமாகாது. நாம் அடக்குமுறைகளைப் பாவித்து, அவர்கள் தமது கருத்துக்களை வெளியிடுவதைத் தடுக்கக்கூடாது. பதிலாக அவர்கள் தமது கருத்துக்களை வெளியிட அனுமதிக்க வேண்டும். அதே வேளையில், அவர்களுடன் விவாதித்து, அவர்களைத் தகுந்த முறையில் விமர்சனம் செய்ய வேண்டும், எல்லாவிதமான தவறான கருத்துக்களையும் நாம் சந்தேகத்திற்கிடமின்றி விமர்சனம் செய்ய வேண்டும். விமர்சனம் செய்யாமல், தவறான கருத்துக்கள் கட்டுபபாடின்றிப் பரவுவதை பார்த்துக் கொண்டிருப்பதும், அவை களத்தில் ஆதிக்கம் செலுத்துவதை அனுமதிப்பதும் உண்மையில் சரியல்ல. தோன்றும் போதெல்லாம் தவறுகளை விமர்சிக்கப்பட வேண்டும். நச்சுக்கள் களையப்பட வேண்டும். ஆனால் இத்தகைய விமர்சனத்தில் வறட்டுவாத, நிலையியல் முறையை பயன்படுத்தக் கூடாது. மாறாக இயக்கவியல் முறையைப் பிரயோகிக்க முயற்சிகள் எடுக்கப்பட வேண்டும். நமக்குத் தேவையானவை அறிவியல் ஆராய்வும், நம்பிக்கை ஊட்டும் நியாமுமே ஆகும்”
(மக்கள் மத்தியில் உள்ள முரண்பாடுகளைச் சரியாகக்
கையாள்வது பற்றி – 27 பிரவரி 1957)

“முரண்பாடும் போராட்டமும் அனைத்தையும் தழுவியவை, சார்பற்றவை, ஆனால் முரண்பாடுகளைத் தீர்க்கும் முறைகள், அதாவது போராட்ட வடிவங்கள், முரண்பாடுகளின் இயல்புகள் வேறுபடுவதற்கு ஏற்ப வேறுபடுகின்றன, சில முரண்பாடுகள் வெளிப்படையாகப் பகை இயல்பு உடையவை, சில அப்படி அல்ல. விசயங்களின் பருண்மையான வளர்ச்சியின்படி, ஆரம்பத்தில் பகையற்றிருந்த முரண்பாடுகள் பகையுடைவையாக இருந்தவை பகையற்ற முரண்பாடுகளாக வளர்கின்றன”
(முரண்பாடு பற்றி – ஆகஸ்ட் 1937)


No comments:

Post a Comment