Sunday 31 December 2017

9. மக்கள் படை - மா சே துங்

இந்தப் படை பலமுடையது. காரணம் இந்த படையைச் சேர்ந்தவர்கள் எல்லோரும் உணர்வுபூர்வமான கட்டுபபாடு உடையவர்கள். அவர்கள் எல்லோரும் ஒரு சில நபர்கள் அல்லது ஒரு குறுகிய கும்பலின் தனி நலன்களுக்காக அல்ல, பதிலுக்க பரந்துபட்ட மக்களின் நலன்களுக்காக, முழு தேசத்தின் நலன்களுக்காகவே ஒன்று சேர்ந்து போரிடுகின்றனர். சீன மக்களின் பக்கத்தில் உறுதியாக நின்று, அவர்களுக்கு முழு மனதுடன் சேவை செய்வதே இந்தப் படையின் ஒரே ஒரு நோக்கம்.
(கூட்டரசாங்கம் பற்றி – 24 ஏப்ரல் 1945)

மக்கள் விடுதலைப் படை எப்பொழுதும் ஒரு போர்ப் படையாக விளங்குகின்றது. தேசிய ரீதியான வெற்றிக்கு பின்னர்கூட நமது நாட்டில் வர்க்கங்கள் ஒழிக்கப்படாத, உலகில் ஏகாதிபத்திய அமைப்பு இன்னும் இருக்கின்ற வரலாற்றுக் கட்டம் முழுதும் நமது படை ஒரு போர்படையாக திகழும். இந்த விஷயத்தில் தவறான புரிதலோ, அல்லது ஊசலாட்டமோ இருக்கக் கூடாது.
(சீன கம்யூனிஸ்ட் கடசி 7வது மத்திய
கமிட்டியின் 2வது பிளீனக் கூட்டத்தின் அறிக்கை 5 மார்ச் 1949)

"கட்சி துப்பாக்கி மீது ஆணை செலுத்துகிறது. கட்சி மீது துப்பாக்கி ஆணை செலுத்துவதை ஒரு போதும் அனுமதிக்க் கூடாது."
(யுத்தமும யுத்த தந்திரமும் பற்றி பிரச்சினைகள் - 6 நவம்பவர் 1938)

No comments:

Post a Comment