Monday 1 January 2018

12. அரசியல் வேலை – மா சே துங்

யுத்தத்தில் ஆயுதங்கள் ஒரு முக்கியமான அம்சம், ஆனால் தீர்மானகரமான அம்சம் அல்ல. தீர்மானகரமான அம்சம் மக்கள் அன்றி பொருட்கள் அல்ல. பலப்போட்டி என்பது இராணுவ ஆற்றல் பொருளாதார ஆற்றல் இவற்றின் போட்டி மாத்திரமல்ல, மனித ஆற்றல் மனவுறுதி இவற்றின் போடியுமாகும். இராணுவ. பொருளாதார ஆற்றலும் மக்களால் தான் ஏற்றி செலுத்தப் படுகின்றது
(நீண்டகால யுத்தம் பற்றி – மே 1938)

அணுகுண்டு என்பது மக்களை அச்சுறுத்துவதற்கு அமெரிக்க பிற்போக்குவாதிகள் பயன்படுததும் ஒரு காகிதப்புலி. அது பயங்கரமாகத் தோன்றுகின்றது. ஆனால் எதார்த்தத்தில் அப்படி அல்ல. அணுகுண்டு என்பது மக்கள் திரளை கொன்று குவிப்பதற்கான ஓர் ஆயுதம் என்பது உண்மைதான். ஆனால் யுத்தத்தின் வெற்றி தோல்வி மக்களால் நிர்ணயிக்கப்படுகின்றது, ஒன்று அல்லது இரண்டு புதியவகை ஆயுதங்களால் அல்ல.
(அமெரிக்க நிருபர் லூயிஸ் ஸ்ட்ராங்குடன்
நிகழ்த்திய உரையாடல் – ஆகஸ்ட் 1946)

செம்படையிலுள்ள தோழர்கள் பலர் மத்தியில் கலப்பற்ற இராணுவக் கண்ணோட்டம் மிகப்பெரும் அளவிற்கு வளர்ந்திருக்கின்றது. அது பின்வருமாறு வெளிப்படுகின்றது;-

1) இந்தத் தோழர்கள் இராணுவ விவகாரங்களையும் அரசியலையும் ஒன்றுக்கு ஒன்று பகைமையானதாகக் கருதுகின்றனர். அரசியல் கடமைகளை நிறைவேற்றும் ஒரு சாதனமே இராணுவ விவகாரம் என்பதை அங்கிகரிக்க மறுக்கின்றனர். “இராணுவ ரீதியில்  நீ நன்றாக இருந்தால், இயற்கையாகவே அரசியல் ரீதியிலும் நீ நன்றாக இருப்பாய், இராணுவ ரீதியில் நன்றாக இல்லாவிட்டால், அரசியல் ரீதியிலும் நன்றாக இருக்க முடியாது.” என்று கூடச் சிலர் சொல்கின்றனர். இது ஒருபடி மேலும் சென்று அரசியலுக்கு இராணுவ விவகாரங்கள் தலைமை தாங்க வேண்டும் என்ற கருதுவதாகும்.
(கட்சியில் நிலவும் தவறான கருத்துகளைத் திருத்துவது பற்றி – டிசம்பர் 1929)

சித்தாந்தக் கல்வியைப் (Ideological education) பற்றிக் கொள்வது கட்சி முழுவதையும் ஐக்கியப்படுத்தி, மாபெரும் அரசியல் போராட்டங்களை நடத்துவதற்கு திறவு கோலாகத் திகழ்கிறது. இந்த கடமையைத் தீர்க்காவிட்டால் கட்சியின் அரசியல் கடமை ஒன்றையேறும் நிறைவேற்ற முடியாது.
(கூட்டரசாங்கம் பற்றி- 24 ஏப்ரல் 1945)

மாணவர்கள், அறிவுத்துறையினர் மத்தியில் அண்மையில் சித்தாந்த அரசியல் வேலையில் ஒரு வீழ்ச்சி காணப்பட்டு, சில ஆரோக்கியமற்ற போக்குகளும் தோன்றியுள்ளன. அரசியல் பற்றியோ அல்லது தாய்நாட்டின் எதிர்காலம் பற்றியோ, மனிதகுலத்தின் இலட்சியங்கள் பற்றியோ அக்கறை கொள்ள வேண்டிய அவசியம் இனிமேல் இல்லை என்று சிலர் எண்ணுவது போல் தோன்றுகின்றது.

ஒரு காலத்தில் பொது வேட்கையோடு படித்த மார்க்சியம் இன்று அவ்வளவு பாவனையற்றதெனக் கருதுவது போல் தோன்றுகின்றது. இத்தகைய நிலைமையை எதிர்நோக்கும் போது, நாம் நமது சித்தாந்த அரசியல் வேலையைப் பலப்படுத்த வேண்டும். மாணவர்களாயினும் சரி. அறிவுத்றையினராயினும் சரி விடா முயற்சியுடன் படிக்க வேண்டும். தங்களுக்கு உரிய சிறப்பான பாடங்களை படிக்கும் அதே வேளையில், அவர்கள் சித்தாந் ரீதியிலும் அரசியல் ரீதியிலும் முன்னேற்றம் அடைய வேண்டும். அதாவது அவர்கள் மார்க்சியம், நடப்பு விவகாரங்கள், அரசியல் ஆகியவற்றையும் படிக்க வேண்டும். சரியான அரசியல் கண்ணோட்டம் இல்லாமல் இருப்பது, உயிரில்லாதிருப்பதற்குச் சமம் .... எல்லா துறைகளும் நிறுவனங்களும் சித்தாந்த, அரசியல் வேலையிலுள்ள தமது பொறுப்புகளுக்குத் தோள் கொடுக்க வேண்டும். கம்யூனிஸ்ட் கட்சி, இளைஞர் சங்கம், இவ்வேலைக்குப் பொறுப்பான அரசாங்க துறைகள் ஆகியவற்றிற்கும், குறிப்பாக கல்வி நிறுவனங்களின் தலைவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் கூட இது பொருந்தியதே
(மக்கள் மத்தியில் உள்ள முரண்பாடுகளைச் சரியாகக்
கையாள்வது பற்றி – 27 பிப்ரவரி 1957)


No comments:

Post a Comment