Wednesday 3 January 2018

18. சர்வதேசியமும் தேசபக்தியும் – மா சே துங்

“ஒரு சர்வதேசியவாதியாக இருக்கும் ஒரு கம்யூனிஸ்டு, அதே நேரத்தில் ஒரு தேசபக்தனாக இருக்க முடியுமா?  அப்படி இருக்க முடியும் என்பது மட்டுமல்ல, இருக்கவும் வேண்டும் என்று நாம் கருதுகிறோம்.

தேசபக்தியின் குறிப்பிட்ட உள்ளடக்கம் வரலாற்று நிலைமைகளால் நிர்ணயிக்கப்படுகிறது. ஒருபுறம் ஜப்பானிய ஆக்கிரமிப்பாளர், இட்லர் ஆகியோரின் “தேசபக்தி” இருக்கின்றது. மறுபுறம் நமது தேபக்தி இருக்கின்றது.இவற்றில் ஜப்பானிய ஆக்கிரமிப்பாளர், இட்லர் ஆகியோரின் “தேசபக்தி”யை கம்யூனிஸ்டுகள் உறுதியாக எதிர்க்க வேண்டும். தத்தம் நாடுகளால் தொடுக்கப்பட்ட யுத்தங்களைப் பொறுத்தவரையில், ஜப்பானிய கம்யூனிஸ்டுகளும், ஜெர்மன் கம்யூனிஸ்டுகளும் தோல்விவாதிகளாவர். சாத்தியமான எல்லா வழிகளிலும் ஜப்பானிய ஆக்கிரமிப்பாளருக்கும் இட்லருக்கும் தோல்வியைக் கொண்டு வருவது ஜப்பானிய, ஜெர்மன் மக்களின் நலன்களுக்கு இசைவானதாகும். தோல்வி எவ்வளவுக்கு முற்றாக ஏற்படுகின்றதோ அவ்வளவுக்குச் சிறந்ததாக இருக்கும். …. காரணம், ஜப்பானிய ஆக்கிரமிப்பாளரும், இட்லரும் தொடுத்துள்ள யுத்தங்கள் உலக மக்களுக்கு மாத்திரமல்ல, அவர்களுடைய நாட்டு மக்ளுக்கும் ஊறு விளைவிக்கின்றன. இருந்தும், சீனாவின் நிலைமை வேறுபட்டது, காரணம் அது ஆக்கிரமிப்பால் பாதிக்கப்பட்ட நாடு, எனவே சீன கம்யூனிஸ்டுகள் தேசபத்தியை சர்வதேசியத்துடன் இணைக்க வேண்டும்.

நாம் ஒரே நேரத்தில் சர்வதேசியவாதிகளாகவும் தேசக்தர்களாகவும் விளங்குகின்றோம். “ஆக்கிரமிப்பாளருக்கு எதிராக தாய்நாட்டைப் பாதுகாக்கப் போரிடுவோம்” என்பது நமது முழக்கம். நம்மைப் பொறுத்தவரையில், தோல்விவாதம் என்பது ஒரு குற்றம். ஜப்பானிய எதிர்ப்பு யுத்தத்தில் வெற்றிக்காக பாடுபடுவது தட்டிக்கழிக்க முடியாத ஒரு கடமை, காரணம், தாய்நாட்டின் பாதுகாப்புக்காக போராடுவதன் மூலம்தான், ஆககிரமிப்பாளரைத் தோற்கடித்து நாம் தேசிய விடுதலை பெற முடியும்.

தேசிய விடுதலை பெறுவதின் மூலம்தான், பாட்டாளி வர்க்கமும் இதர உழைப்பாளி மக்களும் தமது சொந்த விமோசனத்தைப் பெறுவது சாத்தியம், சீனாவின் வெற்றியும், சீனாவை ஆக்கிரமிக்கும் ஏகாதிபத்தியவாதிகளின் தோல்வியும் இதர நாட்டு மக்களுக்கு உதவியாக இருக்கும். இவ்வாறு தேசிய விடுதலை யுத்தங்களின், தேசபத்தி என்பது சர்வதேசியத்தின் பிரயோகமாகும்.”
(தேசிய யுத்தத்தில் சீனக்கம்யூனிஸ்ட் கட்சியின் பாத்திரம் – அக்டோபர் 1938)

“ஓர் அந்நியரைச் சிறிதளவேணும் சுயநலமின்றி, சீன மக்களின் விடுதலை லட்சியத்தைத் தமது சொந்த லட்சியமாகக் கருதும்படி செய்த இவ்வுணர்வு எத்தகையது? இதுதான் சர்வதேசிய உணர்வு, கம்யூனிச உணர்வு என்பது. இந்த உணர்விலிருந்து ஒவ்வொரு சீனக் கம்யூனிஸ்ட்டும் கற்றுக் கொள்ள வேண்டும்… எல்லா முதலாளித்துவ நாடுகளின் பாட்டாளி வர்க்கத்துடனும், ஜப்பான், பிரிட்டன், அமெரிக்கா ஜெர்மனி, இத்தாலி முதலிய எல்லா முதலாளித்துவ நாடுகளின் பாட்டாளி வர்க்கத்துடனும் நாம் ஐக்கியப்பட வேண்டும். இவ்வாறுதான் ஏகாதிபத்தியத்தியத்தை தூக்கி எறிவதும், நமது தேசத்தையும் மக்களையும் விடுதலை செய்வதும் உலகின் இதர தேசங்களையும் மக்களையும் விடுதலை செய்வதும் சாத்தியம். இதுவே நமது சர்வதேசியம், குறுகிய தேசியவாதம் குறுகிய தேசபற்று இரண்டையும் எதிர்க்க நாம் கைக்கொள்ளும் சர்வதேசியம்.”
(நார்மன் பெத்யூன் நினைவுக்காக – 21 டிசம்பர் 1939)

“முழு விடுதலைக்கானப் போராட்த்தில் அடக்கி ஒடுக்கப்பட்ட மக்கள் முதன்முதலாக தமது சொந்தப் போராட்டத்தைச் சார்ந்திருக்க வேண்டும். பின்னர் தான், சர்வதேசிய உதவியைச் சாரவேண்டும். நமது சொந்தப் புரட்சியில் வாகை சூடிய மக்கள், விடுதலைக்காக இன்னும் போராடிக் கொண்டிருக்கும் மக்களுக்கு உதவிசெய்ய வேண்டும். இது நமது சர்வதேசியக் கடப்பாடாகும்.”
(ஆப்பிரிக்க நண்பர்களுடன் நடத்திய உரையாடல் – 8 ஆகஸ்ட் 1963)

“சோஷலிச நாடுகள் என்பவை முற்றிலும் புதிய ரக அரசுகள் அவற்றில் சுரண்டும் வர்க்கங்கள் தூக்கி எறியப்பட்டு, உழைப்பாளி மக்கள் அதிகாரத்தில் இருக்கின்றனர். தேசபக்தியுடன் சர்வதேசியத்தை இணைக்கும் போட்பாடு இந்த நாடுகளிடையே உறவுகளில் கடைப்பிடிக்கப்படுகின்றது. பொது நலன்களாலும் பொது இலட்சியங்களாலும் நாம் நெருக்கமாகப் பிணைக்கப்பட்டிருக்கிறோம்.”
(மகத்தான அக்டோபர் சோஷலிசப் புரட்சியின் 40வது ஆண்டு  நிறைவு
 விழாவின் போது சோவியத் யூனியனின் உயர்தர
சோவியத் கூட்டத்தில் நிகழ்த்திய உரை – 8 நவம்பர் 1957)


No comments:

Post a Comment