Thursday 4 January 2018

19. புரட்சிகர வீர சாகசம் - மா சே துங்

இந்தப் படைக்கு வெற்றி கொள்ளப்பட முடியாத உணர்வு உண்டு. அது எல்லா எதிரிகளையும் தோற்கடிக்குமே தவிர ஒருபோதும் எதிரிக்கு அடிபணிய மாட்டாது. எவ்வித இன்னல்கள் தொல்லைகள் நேர்ந்தாலும் பரவில்லை, கடைசி ஒரு மனிதன் இருக்கும் வரையில், அவன் போராடியே தீருவான்.
(கூட்டரசாங்கம் பற்றி – 24 ஏப்ரல் 1945)

சமரில் துணிவு, தியாகத்துக்கு அஞ்சாமை, தொடர்ச்சியாகப் போரிடுவது (அதாவது ஓய்வின் குறுகிய காலத்தில் அடுத்தடுத்து சமர் பல புரிவது) என்ற நமது போர் நடையை முற்றாக வெளிப்படுத்துவது
(இன்றைய நிலைமையும் நமது கடமைகளும் – 25 டிசம்பர் 1947)

நமக்கு முன் ஆயிரம் ஆயிரம் தியாகிகள் மக்களின் நலன்களுக்காக தமது உயிர்களை வீர தீரத்துடன் அர்ப்பணித்தார்கள், அவர்களுடைய பதாகையை உயர்த்திப் பிடித்து, அவர்களுடைய இரத்தத்தால் சிவந்த பாதையில் பீடுநடை போட்டு முன்னேறுவோமாக.
(கூட்டரசாங்கம் பற்றி – 24 ஏப்ரல் 1945)

உங்களிடம் பல நல்ல இயல்புகள் உண்டு. நீங்கள் மகத்தான தொண்டு ஆற்றியிருக்கிறீர்கள். ஆனால் நீங்கள் செருக்குடையவர்களாய் மாறக்கூடாது என்பதை எப்பொழுதும் மனதில் பதித்துக் கொள்ள வேண்டும். நீங்கள் எல்லோராலும் மதிக்கப்படுகிறீர்கள், இது நியாயமானதே. ஆனால் இது செருக்குக்கு எளிதில் வழிவகுத்துவிடும். நீங்கள் செருக்குடையவராய் மாறினால், அடக்கமாயிருப்பதை விட்டு, முயற்சி செய்யத் தவறினால், பிறருக்கு மதிப்புக் கொடுக்க, ஊழியர்களுக்கும் பொதுமக்களுக்கும் மதிப்புக் கொடுக்கத் தவறினால், பின்னர் நீங்கள் வீரர்களாகவோ, முன் மாதிரியாகவோ இருக்க மாட்டீர்கள். இத்தகைய நபர்கள் முன்பு இருந்தனர் நீங்கள் அவர்களுடைய அடிச்சுவட்டை பின்பற்றமாட்டீர்கள் என நான் எதிர்பார்க்கிறேன்.
(பொருளாதார வேலை செய்ய நாம் கற்க வேண்டும் – 10 ஜனவரி 1945)




No comments:

Post a Comment