Thursday 4 January 2018

21. சுய சார்பும் கடினமான போராட்டமும் - மா சே துங்

நமது கொள்கை சர்ந்திருக்க வேண்டிய அடிப்படை யாது?

அது நமது சொந்த பலத்தைச் சார்ந்திருக்க வேண்டும். அதன் அர்த்தம், ஒருவர் தமது சொந்த முயற்சிகள் மூலம் புதுவாழ்வு பெறுவதாகும். நாம் தனிமைப்பட்டு நிற்கவில்லை. ஏகாதிபத்தயத்திற்கு எதிரான எல்லா உலக நாடுகளும் மக்களும் நமது நண்பர்கள், இருந்தும், நமது சுயமுயற்சிகள் மூலம் புது வாழ்வு பெறுவதை நாம் வற்புறுத்துகின்றோம். நாம் சுயமாக அணிதிரட்டும் சக்திகளைச் சார்ந்து, உள்நாட்டு வெளிநாட்டுப் பிற்போக்கவாதிகள் அனைவரையும் எம்மால் தோற்கடிக்க முடியும்.
(ஜப்பாயினய – எதிர்ப்பு யுத்த வெற்றிக்குப் பிந்திய நிலைமையும்
நமது கொள்கையும் – 13 ஆகஸ்ட் 1945)

நாம் சுய சார்புக்காக நிற்கிறோம். நாம் அந்நிய உதவியை எதிர்பார்க்கிறோம், ஆனால் அதைச் சார்ந்திருக்க முடியாது. நாம் எமது சொந்த முயற்சிகளை, முழு இராணுவத்தினதும் மக்கள் அனைவரினதும் படைப்பாற்றலைச் சார்ந்திருக்கிறோம்.
(பொருளாதார வேலை செய்ய நாம் கற்க வேண்டும் – 10 ஜனவரி 1945)

வெற்றி  மீது மக்களின் நம்பிக்கையை வளர்ப்பதற்காக உலக முன்னேற்றம் பற்றியும் ஒளிமயமான எதிர்காலம் பற்றியும், அவர்கள் மத்தியில் நாம் இடைவிடாது பிரச்சாரம் செய்ய வேண்டும். அதே வேளையில், நமது பாதையில் வளைவுகளும் சுளிவுகளும் உண்டு என்று மக்களுக்கும், நமது தோழர்களுக்கும் நாம் சொல்ல வேண்டும்.

புரட்சிப் பாதையில் இன்னும் பல தடைகளும் இன்னல்களும் கிடக்கின்றன. இன்னல்கள் குறைவாக இருப்பதிலும் பார்க்க, கூடுதலாக இருக்கும் என்று நாம் கொள்ள விரும்பும் காரணத்தால், நமது கட்சியின் 7வது கட்சிப் பேராயம் இன்னல்கள் கூடுதலாக இருக்கலாம் என்று நினைவூட்டியது. சில தோழர்கள் இன்னல்கள் பற்றி கூடுதலாக சிந்திக்க விரும்பவில்லை. ஆனால் இன்னல்கள் யதார்த்தத்தில் இருக்கின்றன, எத்தனை இன்னல்கள் இருந்தாலும், நாம் அத்தனையையும் அங்கீகரிக்க வேண்டும. “அங்கீகரியாமை கொள்கை”யை நாம் கடைப்பிடிக்கக் கூடாது.

நாம் இன்னல்களை அங்கீகரிக்க வேண்டும், அவற்றை ஆராய வேண்டும், எதிர்த்துப் போராட வேண்டும. உலகில் நேரிய பாதைகள் கிடையாது. வளைவு சுளிவுகள் மலிந்த பாதையில் செல்ல நாம் தயாராக இருக்க வேண்டுமேயன்றி, விசயங்களை மலிவாகப் பெறலாம் என எண்ணிவிடக் கூடாது.

ஒரு நல்ல உதய காலத்தில் பிற்போக்குவாதிகள் எல்லாரும் சுயமாக அடிபணிந்து விடுவர் என்று நாம் கற்பனை செய்யக் கூடாது. சுருங்கச் சொன்னால், எதிர்காலம் ஒளிமயமாக இருக்கும் அதே வேளையில், பாதை வளைவு சுளிவுகளுடன் காணப்படுகின்றது. நாம அலட்சியம் செய்யக்கூடாத பல இன்னல்கள் இன்னும் இருக்கின்றன. ஒரு பொது முயற்சியில் மக்கள் அனைவருடன் ஐக்கியப்படுவதன் மூலம் நாம் இன்னல்கள் அனைத்தையும் கடந்து நிச்சயம் வாகை சூட முடியும்.
(சுங்கிங் பேச்சு வார்த்தைகளைப் பற்றி – 17 அக்டோபர் 1945)

ஒளிமயமான பக்கத்தை மாத்திரம் பார்க்கும் அதே வேளையில் இன்னல்களைக் காணத் தவறும் எவரும் கட்சிக் கடமைகளின் நிறைவேற்றறத்துக்கு பயனுள்ள முறையில் போராட முடியாது.
(கூட்டரசாங்கம் பற்றி – 24 ஏப்ரல் 1955)

கட்சித் தோழகள் எல்லோரும் இவை அனைத்தையும் முற்றாகக் கணக்கில் எடுத்து வெல்லப்பட முடியாத திட சித்தத்துடன் ஒரு திட்டமிட்ட முறையில். எல்லா இன்னல்களையும் கடக்கத் தயாராயிருக்க வேண்டும். பிற்போக்கு சக்திகளுக்கும் நமக்கும் இன்னல்கள் இருக்கத்தான் செய்கின்றன. ஆனால் பிற்போக்கு சக்திகளின் இன்னல்கள் கடக்க முடியாதவை. காரணம் அவை அழிவின் விளிம்பில் இருக்கின்ற, எதிர்காலம் இல்லாத சக்திகள், நமது இன்னல்கள் சமாளிக்கக் கூடியவை, காரணம் நாம் புத்தம் புதிய வளரும் சக்திகள், நமக்கு ஒளிமயமான எதிர்காலம் உண்டு.
(சீனப் புரட்சியின் புதிய உச்சநிலைமையை வரவேற்போம் – 1 பிப்ரவரி 1947)

இன்னல்களின் போது நமது சாதனைகளை நாம் மறந்துவிடக் கூடாது, ஒளிமயமான எதிர்காலத்தை எண்ணி, நமது துணிவை வரவழைத்துக் கொள்ள வேண்டும்.

(மக்களுக்குத் தொண்டு செய்க – 8 செப்டம்பர் 1944)

No comments:

Post a Comment