Saturday 6 January 2018

23. பரிசீலனையும் படிப்பும் – மா சே துங்

உங்களால் அந்தப் பிரச்சினையைத் தீர்க்க முடியாதா? சரி, அந்தப் பிரச்சினையின் இன்றைய உண்மைகளையும் அதன் பழைய வரலாற்றையும் பரிசீலனை செய்யுங்கள். பிரச்சியை முற்றாக பரிசீலனை செய்ததும், அதை தீர்ப்பது எப்படி என்பதை நீங்கள் அறிவீர்கள். நிலைமைகளைப் பரிசீலனை செய்த பின், எல்லா முடிவுகளும் கிடைக்குமேயன்றி, அதற்கு முன் அல்ல. எவ்வித பரிசீலனையும் செய்யாமல் ஒரு முட்டாள் மாத்திரமே சுயமாக அல்லது ஒரு கும்பலுடன் சேர்ந்து “ஒரு தீர்வு காண்பதற்கு” அல்லது “ஒரு கருத்தை வெளியிடுவதற்கு”த் தனது மூளையை கசக்கிப் பிழிவான். இது எவ்வித நல்ல தீர்வுக்கும், அல்லது எவ்வித நல்ல கருத்துக்கும் வழி கோலுவது சாத்தியமாகாது என்பது வலியுறுத்தப்பட வேண்டும்.
(புத்தக வழிபாட்டை எதிர்ப்பது – மே 1930)

உண்மை நிலவரங்கள் அறியும் கூட்டம் பெரிதாக இருக்க வேண்டியது இல்லை. மூன்று முதல் ஐந்து அல்லது ஏழு அல்லது எட்டு பேர் போதுமானது. இதற்குப் போதுமான காலம் கொடுக்கப்பட வேண்டும். பரிசீலனைக்கான ஒரு பட்டியல் தயாரிக்கப்பட வேண்டும். மேலும் ஒவ்வொருவரும் தாங்களாக கேள்விகள் கேட்டு குறிப்புகள் எடுத்து, கூட்டத்தில் உள்ளவர்களுடன் விவாதங்கள் நடத்த வேண்டும். எனவே பொங்குகின்ற ஆர்வமும், தனது கண்களை கீழே செலுத்திப் பார்க்கும் உறுதிப்பாடும், அறிவு தாகமும் இல்லாவிட்டால், அசிங்கமான போலி நடிப்பு முகமூடிகளைக் களைந்துவிட்டு விசுவாசமுள்ள மாணவனாக மாறாவிட்டால் ஒருவரால் உண்மையான ஒரு பரிசீலனையை நடத்த முடியாது, நடத்தினாலும் அதை நன்றாகச் செய்ய முடியாது.

(கிராமிய பரிசீலனையின் முன்னுரையும் பின்னுரையும் – மார்ச் – ஏப்ரல் 1941)

No comments:

Post a Comment