Saturday 6 January 2018

26, கட்டுப்பாடு – மா சே துங்

மக்களின் அணிகளுக்குள் ஜனநாயகம் மத்தியத்துவத்துடன் தொடர்புடையது, சுதந்திரம் கட்டுப்பாட்டுடன் தொடர்புடையது, அவை ஒரே முழுமையான அம்சத்தின் இரண்டு எதிர்மறைகள், அவை முரண்பாடும் அதே சமயத்தில் ஐக்கியம் உடையவை. நாம் ஒருதலைபட்சமாக ஒன்றை வலியுறுத்தி, மற்றதை மறுக்கக் கூடாது, கட்டுப்பாடு இல்லாமல் இருக்கக் கூடாது. ஜனநாயகம் இல்லாமல் இருக்கக் முடியாது, மத்தியத்துவமும் இல்லாமல் இருக்க முடியாது. ஜனநாயகம் மத்தியத்துவம் இரண்டின் ஐக்கியம், சுதந்திரம் கட்டுப்பாடு இரண்டின் ஐக்கியம் – இதுவே நமது ஜனநாக மத்தியத்துவ கோட்பாடாகும். இந்த அமைப்பின் கீழ் மக்கள் பரந்து விரிந்த ஜனநாயகத்தையும், சுதந்திரத்தையும் அனுபவிக்கின்றனர். அதே சமயத்தில் அவர்கள் சோஷலிச கட்டுப்பாடு என்ற எல்லைக்குட்பட்டு ஒழுக வேண்டும்.
(மக்கள் மத்தியில் உள்ள முரண்பாடுகளைச் சரியாகக்
கையாள்வது பற்றி – 27 பிப்ரவரி 1957)

நாம் கட்சியின் கட்டுப்பாட்டைப் புதிதாக ஊர்ஜிதம் செய்ய வேண்டும், அதாவது
1)   தனிநபர் அமைப்பிற்குக் கீழ்ப்படிய வேண்டும்.
2)   சிறுபான்மை பெரும்பான்மைக்குக் கீழ்ப்படிய வேண்டும்.
3)   கீழ்மட்டம் மேல் மட்டத்திற்கு கீழ்ப்படிய வேண்டும்.
4)   உறுப்பினர் அனைவரும் மத்திய கமிட்டிக்குக் கீழ்ப்படிய வேண்டும்.

யார் கட்டுப்பாட்டின், இந்த விதிகளை அத்துமீறிகிறாரோ, அவர் கட்சி ஐக்கியத்தைச் சீர்குலைப்பவராவர்.
(தேசிய யுத்தத்தில் சீனக் கம்யூனிஸ்ட் கடசியின் பாத்திரம் – அக்டோபர் 1938)

கட்சிக் கட்டுப்பாட்டின் ஒர் அம்சம் சிறுபான்மை பெரும்பான்மைக்குக் கீழ்ப்படிவதாகும். சிறு பான்மையின் கருத்தோட்டம் நிராகரிக்கப்பட்டால், அது பெரும்பான்மையால் அங்கீகரிக்கப்பட்ட தீர்மானத்தை ஆதரிக்க வேண்டும். தேவையானால், அடுத்த கூட்டத்தில் அவ்விசயத்தை அது மறுபரிசீலனைக்குக் கொண்டு வரலாம். ஆனால், இதைவிட்டு எவ்விதத்திலும் தீர்மானத்துக்கு எதிராகச் செயல்படக் கூடாது

(கட்சியின் நிலவும் தவறான கருத்துக்ளைத் திருத்துவது பற்றி – டிசம்பர் 1929)

No comments:

Post a Comment